Home இலங்கை தபால்மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

தபால்மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

by ilankai

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. 

நேற்றைய தினமும் , இன்றைய தினமும் வாக்களிக்க தவறியவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும், சிறி தலதா வழிபாட்டு நிகழ்வை முன்னிட்டு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக விசேட தபால் வாக்களிப்பு மத்திய நிலையம் கண்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

அதற்கமைய, கண்டி உயர் மகளிர் வித்தியாலயத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles