
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.