மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சாதனை


 2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 140,614 பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தல விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தல விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட அவதானமே இந்தச் சாதனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வனவிலங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை முன்னெடுக்கத் தயக்கம் காட்டின. இப்பிரச்சினைகளுக்குப் புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், 2025 இல் விமானங்களின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மத்தல சர்வதேச விமான நிலையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை இணைக்கும் வகையில் பல விமான நிறுவனங்கள் 2025 இல் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளன.அதன்படி, ரஷ்யாவின் Red Wings, பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தானிலிருந்து SkyUp, டுபாயிலிருந்து Fly One, உஸ்பெகிஸ்தானிலிருந்து Centrum Air மற்றும் Uzbekistan Airways, பல்கேரியாவிலிருந்து Bulgaria Air ஆகிய நிறுவனங்கள் மத்தல வரை தமது விமானச் சேவைகளை நடத்தியுள்ளன.மேலும், பெலாரஸின் மின்ஸ்க் நகரிலிருந்து Belavia விமான சேவை 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது பயணங்களை ஆரம்பித்தமை ஒரு விசேட அம்சமாகும்.மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையின் பல சுற்றுலாத் தலங்களை இலகுவாகச் சென்றடைய முடிவதால், நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகப்படியான நெரிசலுக்கு ஒரு சிறந்த மாற்றீடாகவும் மூலோபாய ரீதியாக மத்தல விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது.பில்லியன் கணக்கான பொதுப்பணம் செலவிடப்பட்டு, பயன்பாடின்றி அழிந்து போகும் நிலையில் இருந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், 2025 இல் ஈட்டியுள்ள இந்த வெற்றி, விமான நிலையம் குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related Posts

லூவ்ரே-கொள்ளையில்-கைவிடப்பட்ட-பேரரசியின்-கிரீடம்-முழுமையாக-மீட்டெடுக்கப்பட்டது

லூவ்ரே கொள்ளையில் கைவிடப்பட்ட பேரரசியின் கிரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. மேலும் அக்கீரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று லூவ்ரே அருங்காட்சியகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற…

Read more

அரசு இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது

 மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more