டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்


 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (06) கண்டியில் நடைபெறவுள்ளது. அதற்கமைய, ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும். ‘டித்வா’ புயலினால் தமது கைத்தொழில் நிலையங்கள் அல்லது இயந்திர உபகரணங்கள் போன்றவற்றிற்குச் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு, வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நட்டஈட்டுத் தொகையாக 02 இலட்சம் ரூபா வீதம் இதன்போது வழங்கப்படவுள்ளது. சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற பேதமின்றி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் இந்த நிதியுதவி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், கண்டி மாவட்டத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்குப் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா தொகையில், முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபா காசோலைகளை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். தமக்குச் சொந்தமான காணியில் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீட்டை நிர்மாணிக்கும் நபர்கள் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்படுவர். ‘டித்வா’ புயல் காரணமாக முழுமையாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காகக் காணிகளை வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்குதல் என்பன நாளை (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், வீடுகள் பகுதியளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் நட்டஈட்டுத் தொகையை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்குச் சமாந்தர ஒன்றாக, புதிய வீடொன்றின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இதனிடையே, கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளும் நாளை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், நீண்ட காலமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதும் நாளை முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts

லூவ்ரே-கொள்ளையில்-கைவிடப்பட்ட-பேரரசியின்-கிரீடம்-முழுமையாக-மீட்டெடுக்கப்பட்டது

லூவ்ரே கொள்ளையில் கைவிடப்பட்ட பேரரசியின் கிரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. மேலும் அக்கீரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று லூவ்ரே அருங்காட்சியகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற…

Read more

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

 2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின்…

Read more

அரசு இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது

 மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more