இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையாம்

இந்திய-கடற்படையினர்-இலங்கை-மீனவர்கள்-மீது-தாக்குதல்-நடத்தவில்லையாம்


கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.அத்துடன், கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மதிப்பளித்து மனிதாபிமான ரீதியிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்தியத் தரப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர் குழுவொன்று குற்றம் சுமத்தியிருந்தது. சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். அத்துடன், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் தெரிவித்தார். 

Related Posts

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

 2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின்…

Read more

அரசு இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது

 மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்

 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

Read more