இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 17ஆம் திகதி பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அவரது தலையில் தாக்கி பாரிய காயங்களை ஏற்படுத்தியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோடாரித் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (04) அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரகதி அபேசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில், புலஸ்திகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.ஐ. ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
