Related Posts
தமிழகம் திமுக வெற்றிக்காக பாடுபடும் வசூல் ராஜாவாக மாறிவிட்டார் விஜய்: பாஜக விமர்சனம்
திமுகவின் வெற்றிக்காக பாடுபடும் வசூல் ராஜாவாக விஜய் மாறிவிட்டார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்தை வெற்றி வியாபார கழகமாக மாற்றி, ரசிகர்களையும், தொண்டர்களையும், கட்சியையும் அடமானம் வைத்து, திமுகவை வெற்றி பெற வைக்கும் வசூல் ராஜாவாக மாறிவிட்டார் நடிகர் விஜய்.
இந்நிலையில், தேர்தல் ஆலோசகராக செயல்படும் அனைத்துக் கட்சி அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா வீட்டில் விருந்து சாப்பிட்ட விஜய்யை நினைத்து தவெக தொண்டர்கள் ரத்தம் கொதிக்கின்றனர். திமுக அரசை தட்டி கேட்டு, நடந்த தவறை சுட்டிக்காட்டி நியாயம் கேட்க வேண்டிய விஜய், ஆதவ் அர்ஜுனா இயக்கத்தில் டான்ஸ் ஆடுகிறார்.
அவரின் தேர்தல் வியாபார விருந்தில் தலையாட்டி பொம்மையாய் பங்கேற்கிறார். மக்கள் விரோத திமுக ஆட்சி தோற்றுவிடும், திமுக எனும் தீய சக்தி அழிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய லாட்டரி பூத அடிமை ஆதவ் அர்ஜுனா மூலம் அரசியல் நடிகர் விஜய்யை பத்து பட சம்பளம் கொடுத்து விலை பேசி விட்டனர்.
2026 சட்டப்பேரவை தேர்த..
சோழர் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிலம் வழங்க எதிர்ப்பு!
‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைச் சுருக்கும் வகையில், ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் கட்ட 50 ஏக்கர் பரப்பளவு நிலம் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ராஜராஜன் அருங்காட்சியகம் என்று காரணம் காட்டி, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நிலப்பகுதியைக் கையகப்படுத்தி, தமிழையும் தமிழ் வளர்ச்சியையும் சுருக்கிவிட இடம் தரக்கூடாது’ என தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு என்று நூற்றுப்பத்து ஏக்கர் தமிழின் பல்துறைகளையும் வளர்க்க வேண்டும் எனத் தரப் பெற்றுள்ள நிலத்தில் அரசு அலுவலகங்கள், மூலிகைப் பண்ணை, பொதுக் குடியிருப்பு வளாகம் என வேறு வகைப் பணிகளுக்கான கட்டடங்களுக்காகக் கைப்பற்ற வேண்டாம் எனத் தஞ்சாவூர்த் தமிழ் அமைப்புகள் தடுத்தன.
இப்போது, ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் கட்ட 50 ஏக்கர் பரப்பளவு நிலம் எடுத்துக் கொள்ளத் திட்டம் கூறியுள்ளனர். தமிழ்க் கல்விக்கான பல துறைகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஆவணங்களுக்குமே நூறு ஏக்கர் போதாது.
ராஜராஜன் பிறந்து வளர்ந்த உடையாரூர் (உடையாளூர்) , திருப்புறம்பியம், குடந்தை, வல்ல..
மதுரை ‘எய்ம்ஸ்’ திறக்கப்படுமா?
பிரதமர் மோடி மதுரைக்கு இம்மாதம் 28-ம் தேதி வருவதால், சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போதே அந்த பொதுக் கூட்டம், மதுரையில்தான் முதலில் நடப்பதாக இருந்தது. பின்னர் அதற்கான இடமும் பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சென்னைக்கு இந்த பொதுக் கூட்டம் அவசரம் அவசரமாக மாற்றப்பட்டது. அப்போதே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை திறப்பதற்குதான், அந்த பொதுக் கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடுவதாக கூறப்பட்டது.
இதனிடையே, தற்போது திடீரென்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமர் மோடி, மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது அவர், மதுரை தோப்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால்,..
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும்: வருமான வரித் துறை
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, ரூ.20 கோடி செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர..
தமிழக மாநகராட்சிகளில் 50% அமைச்சு பணியிடங்கள் காலி – காரணம் என்ன?
மாநகராட்சிகளில் துணை ஆணையர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வுகளில் நீடிக்கும் சிக்கல்களால், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் உருவாகி உள்ளன.
சென்னை மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் நீங்கலாக, பழைய 20 மாநகராட்சிகளுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப பணியிடங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 20 மாநகராட்சிகளில் 22 துணை ஆணையர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதில் 12 பணியிடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இணை இயக்குநர்கள் மாற்றுப்பணி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 10 துணை ஆணையர் பணியிடங்களில் மாநகராட்சிகளில் பணிபுரியும் உதவி ஆணையர் கிரேடு-1 (மண்டலம்) ஊதிய நிலை 25-ல் உள்ளவர்களை பதவி உயர்வு வழங்கி பணி நியனம் செய்யப்பட வேண்டும்.
இதில் திருப்பூர் மாநகராட்சி தவிர, மற்ற மாநகராட்சிகளில் இந்த அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதேபோல், உதவி ஆணையர் முதல் கடைநிலை இளநிலை உதவியாளர் பணிநிலை வரை பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு, மாநகராட்சிகளி..
400 ரூபா சம்பள அதிகரிப்பால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படடுள்ளன – விபரிக்கிறார் பழனி திகாம்பரம் MP
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட…
Read more