நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கையளித்தார் பைஸர் முஸ்தபா

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இலங்கையின் தனிநபர் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை இன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என குறித்த மசோதாவில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய முன்மொழிவுகள்:

1. திருமண முறிவு: ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை (Irretrievable breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல்.

2. முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தம்: திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண்கள் காதிகளாகப் பணியாற்றுவதற்கான தடையை நீக்கல் மற்றும் காதிகள் அனைவரும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் சட்டத்தின் முன் சமத்துவத்தை நிலைநாட்டும் ஒரு காலோசிதமான தலையீடு என பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Thumb Large Ravikaran 1 300X228 1

நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்!

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தா..

Read more
Images 12

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது அமைச்சு

சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் புதன்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு “சதுன் புதா 04” (IMUL-A 0852 CHW) எனும் பலநாள் மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்களே இலக்காகியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை கரைக்கு அழைத்து வரப்பட்ட இந்த மீனவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்:
“இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் மிலேச்சத்தனமானது. இவர்களது கூற்றுப்படி, இது இந்தியக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. எவ்வாறாயினும், இதனுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, இந்தியாவின் பெயர், கொடி அல்லது மொழியைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் குழு இக்க..

Read more
குருபரன் 300X300 1

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் – கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen’s constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியலமைப்பு மற..

Read more
உதய கம்மன்பில

முன்னைய முயற்சிகளின் தோல்விக்கான காரணத்தை கண்டறியாமல் முன்னோக்கி நகர்வது சாத்தியமில்லை

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என ஆராய்ந்து, அதற்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகி..

Read more
தீபிகா உடகம

தமக்கு என்ன வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் வழங்குங்கள்

தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பு குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடலை அர்த்தமுள்ளதாக மேற்கொள்ளமுடியும். இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாடளாவிய ரீதியில் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனச் சிந்திக்க வேண்டும். கொழும்பிலுள்ள ஒரு தரப்பு நினைப்பது மாத்திரம் சரியானதாக இருக்காது.
இதன் வெளியீடு மக்களுக்குத் திருப்திகரமானதாக அமைவதற்கு, இச்செயன்முறை குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் சகலரையும் உள்ளடக்கியதாகவும், உரிய முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப..

Read more
கலாநிதி ஹர்ஷ டி சில்வா 300X200 1

75 ஆண்டு கால சாபம்’ என்ற கருத்தை சுதந்திர தின உரையில் மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்! -ஹர்ஷ டி சில்வா

தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ’75 ஆண்டு கால சாபம்’ என்ற கருத்தை நிராகரித்துள்ளார். அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துமே மோசமானவை அல்ல. கடந்த 78 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த பலமான, நீதியான மற்றும் நல்ல விடயங்களை நாம் முன்னோக்கி எடுத்துச் சென்று பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
புதன்கிழமை (04) கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் காணொளியொன்றை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை சுட்டிக்காட்டி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார். குறித்த காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்த போதிலும், எமக்கு இன்னும் உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே முதல் உண்மையாகும். பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் போதுதான் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அப்போதுதான் எமது மக்கள..

Read more