இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகங்களின்படி, “டி20 உலகக் கிண்ணம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மிகவும், கவனமாக ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுகளில் அரசியல் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்திய ஷெரீப், ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த விடயம் முழுமையாக மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்காமல், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இந்த லீக் போட்டியானது, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான அரசாங்கத்தின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும்” என்று பதிவு செய்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசின் இந்த முடிவானது கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தான் ரசிகர்களுக்கோ நல்ல செய்தி அல்ல. ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுப்பது நியாயமில்லாதது.

இது உலக கிரிக்கெட்டையே பாதிப்புக்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை, கடுமையான அபராதம் மற்றும் தடைகளை விதிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் போனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை சுமார் 300 மில்லியன் டொலருக்கு அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பாக இன்று அறிவித்தார் மின்சாரக் கட்டணக் குறைப்பு: முக்கிய விபரங்கள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் படி: • வாக்குறுதி: அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்…

Read more

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது…

Read more

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி பாத்திமா நஷீமா, கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #பொலன்னறுவை

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இலங்கையில் சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்துவது அதிகரிப்பு

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more
பேர்லினில்-உறைபனி-விமானப்-போக்குவரத்து-நிறுத்தம்

பேர்லினில் உறைபனி விமானப் போக்குவரத்து நிறுத்தம்

உறைபனி மழை காரணமாக விமானங்கள் பனியை அகற்ற முடியாததால், வியாழக்கிழமை காலை பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.காலை 10:15 மணி நிலவரப்படி, விமானங்கள் எதுவும் புறப்படவில்லை என்று விமான கண்காணிப்பு…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 142 மூலம் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் குழு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வரத் தவறியதால், விமானம் பல காலி இருக்கைகளுடன் கட்டுநாயக்காவுக்குப் புறப்பட்டது.
மும்பை விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் சாரணர் குழு திட்டமிட்டபடி விமான நிலையத்தை அடைவது தடைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, இன்று பிற்பகல் வரை இலங்கைக்குத் திரும்புவது குறித்து அந்தக் குழு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது.
நிலைமையைத் தொடர்ந்து, அரசாங்கம் தலையிட்டு, சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது..

Read more