Related Posts
கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கி 39 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
மதுரி Thursday, February 05, 2026 கிளிநொச்சி, முதன்மைச் செய்திகள் கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை…
Read moreஅடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (பெப். 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு அலகிற்கான மின் உற்பத்திச் செலவு 37…
Read moreபேராயர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக ‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர்…
Read more
ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்
ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது வந்துவிட்டது.
அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ‘மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார். நாம் இப்போது ’ஜென் ஷீ’ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.
நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும் மற்றும் தொழில்நுட்பங்களைத் தழுவ வேண்டும்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை. நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்.
அதே சமயம் ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
எமத..
இலங்கையில் சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு
சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.
திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவ..
