Home

மக்காஹ் நகரில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 78வது சுதந்திர தினம். 🇱🇰💙

மக்காஹ் நகரில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 78வது சுதந்திர தினம். 🇱🇰💙இன்று சவூதி அரேபியாவின் மக்காஹ் க்ளோக் ரோயல் டவர் ஹோட்டலில் (Makkah Clock Royal Towe

அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
“ஜனாதிபதியின் பாரியார் என்னைச் சந்தித்தார்.. அவர் ஒரு அரசகுமாரி போன்ற இளமையான நற்குலப் பெண்…” – ராஜாங்கனே தேரர்
The 7 biggest cheap ticket blunders


மக்காஹ் நகரில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 78வது சுதந்திர தினம். 🇱🇰💙இன்று சவூதி அரேபியாவின் மக்காஹ் க்ளோக் ரோயல் டவர் ஹோட்டலில் (Makkah Clock Royal Tower Hotels), நம் இலங்கை நாட்டின் 78வது சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஒற்றுமை, உற்சாகம் மற்றும் தேசிய பெருமை ஆகிய உணர்வுகளுடன், அனைவரும் ஒன்றிணைந்து இந்த முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாளை நினைவுகூர்ந்தனர்.அங்கு பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கை நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில், பாரிய கேக் வெட்டி பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்களை தயாரித்து, அனைத்து முகாமைத்துவக் குழுவினருக்கும் அனைத்து பிற நாட்டு சக பணியாளர்களுக்கும் சிறப்பாக பரிமாறினர். ஒவ்வொரு ஆண்டும் அவ் ஹோட்டலில் இலங்கையின் சுதந்திர தினத்தை பெருமையுடன் நட்புறவையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் வண்ணம் இவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.