ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

HomeSport

ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.ப

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
மூதூரில் பாவனைக்கு உதவாத 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!
ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த மோகனராசா லோயிதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவன் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கிய நிலையில் ,ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.