“நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறிதரன் உள்ளிட்டோர் உதவ வேண்டும்” : அரசாங்கம் தெரிவிப்பு

நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்”.

“அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”.
“சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி, தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்” என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.”
“இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும்” அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related Posts

மனநலச் சுகாதார சட்டம் விரைவில் – பிரதி அமைச்சர்

 மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்…

Read more
பிரான்சில்-இடம்பெற்ற-சிறிலங்கா-சுதந்திர-நாள்-தமிழினத்தின்-கரிநாள்-போராட்டம்

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம்…

Read more
ஈழத்தமிழர்களுக்கு-கரிநாள்-–-இலங்கையின்-சுதந்திர-தினத்தில்-லண்டனில்-மாபெரும்-கண்டன-ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் – இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும்  படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு  காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று …

Read more
தவறான-நோயறிதல்:-நுழையீரல்-அகற்றப்பட்டது!

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.மற்றொரு தவறான…

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

 அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

 முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more