இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் சாரதிகளுக்கு அரசாங்கம் நியமனம் வழங்கியுள்ளது.
பெண் சாரதிகளை நியமிப்பது என்பது வெறும் வாய்வார்த்தைகளாக கூறப்பட்டுவந்த நிலையில் முதல் முறையாக பெண் சாரதிகளுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்கியுள்ளது.
சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம், சிறந்த நாடு, சிறந்த சமூகம் மற்றும் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்க முடியும் என்ற அரசாங்கத்தின் கருபொருக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பெண் சாரதிகள் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பேசப்பட்டு வந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ்தான் இந்த விடயம் சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.
ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளை உருவாக்கி கொடுத்தமைக்காக நியமனங்களை பெற்றுக்கொண்ட பெண் சாரதிகள் துறைசார் அமைச்சரான பிமல் ரத்நாயக்கவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
