மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது அமைச்சு

Images 12

சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் புதன்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு “சதுன் புதா 04” (IMUL-A 0852 CHW) எனும் பலநாள் மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்களே இலக்காகியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை கரைக்கு அழைத்து வரப்பட்ட இந்த மீனவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்:

“இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் மிலேச்சத்தனமானது. இவர்களது கூற்றுப்படி, இது இந்தியக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. எவ்வாறாயினும், இதனுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, இந்தியாவின் பெயர், கொடி அல்லது மொழியைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் குழு இக்குற்றத்தை இழைத்திருப்பின், அது இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், எமது மீனவ சமூகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.”

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறியப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினர் இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

“நாங்கள் கடற்றொழில் அமைச்சாக மீனவ சமூகத்தின் பாதுகாப்பிற்காக முன்னிற்கின்றோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்,” என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர், “தினிதி துவ 01” மற்றும் “தினிதி துவ 03” ஆகிய படகுகளில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு மீனவர் குழு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் கடந்த 31 ஆம் திகதி அவ்வைத்தியசாலைக்குச் சென்று அவர்களின் நலன் விசாரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்

 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

Read more
25953243 Newproject 2026 02 05T171229326

மோடிமீது தாக்குதல் நடத்த திட்டமா? – பெண் எம்.பி.க்கள் கூறுவது என்ன?

லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க ” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எம்பி ஜோதிமணி மற்றும் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள எம்பி ஜோதிமணி, “கேள்விகளுக்கு பயந்துகொண்டு மோடி அவைக்கு வரவில்லை.
ராணுவ தளபதி கூறியது பொய் என பிரதமர் கூறுவாரா? மோடி, அதானி, பாஜகவை காப்பாற்ற இந்தியாவை மொத்தமாக அமெரிக்காவிற்கு அடகு வைத்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்? அதுபோல எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் விளக்கவேண்டும். இதைத்தான் கேட்கிறோம். இவைகளை கேட்க ராகுல் காந்தி முயலும்போது அவரை பேசவிடாமல் தடுக்கின்றனர். அவர்களின் பயமும், பலவீனமும் இன்று பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்துள்ளது. அனைத்தையும் மறைக்க..

Read more

VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய  அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP

🔸இன்றைய (05.02.2026)  பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.   • கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்வதில் அமைச்சர்…

Read more