மனநலச் சுகாதார சட்டம் விரைவில் – பிரதி அமைச்சர்


 மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய மனநலக் கொள்கையானது நூறு ஆண்டுகள் பழமையானது. எனவே, அதனை நவீனமயப்படுத்துவது காலத்தின் தேவையாகும். நாட்டின் மனநலச் சுகாதார சேவையானது தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் காணப்படுகிறது. இது ஒரு கடினமான காரியம் என்ற போதிலும், இதற்கான முதற்கட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவை தற்போது பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணுக்கு ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற யுவதி

கனகராசா சரவணன் மட்டக்களப்பு புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும்…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

JVP பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.
“இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த குழு, இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more
சுதந்திர-தின-கொண்டாட்டத்தில்-போர்-தளபாடங்களை-காட்சிப்படுத்தவில்லை-என-சரத்-வீரசேகராவிற்கு-கவலை

சுதந்திர தின கொண்டாட்டத்தில் போர் தளபாடங்களை காட்சிப்படுத்தவில்லை என சரத் வீரசேகராவிற்கு கவலை

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.கொழும்பில்…

Read more

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதியாகவும் இருக்கும் டொனால்ட்…

Read more

இது ட்ரம்ப் யுகம்…  அரசியல் கட்சிகளையும், அரசியலையும் Gen Z  தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் – இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும் என ரணில் வேண்டுகோள்

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர்…

Read more

“ஜனாதிபதியின் பாரியார் என்னைச் சந்தித்தார்.. அவர் ஒரு அரசகுமாரி போன்ற இளமையான நற்குலப் பெண்…” – ராஜாங்கனே தேரர்

ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) உண்மையிலேயே ஒரு நற்குலப் பெண் என ராஜாங்கனே தேரர் தெரிவித்துள்ளார். அவர் தன்னைச் சந்திக்க வந்ததாகத் தனது இணையத்தள அலைவரிசையில் (YouTube) வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் பாரியார் மிகவும் இளமையானவர் என்றும்,…

Read more