மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணுக்கு ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற யுவதி


கனகராசா சரவணன்

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் அவர் அணிந்திருந்த 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுன் தங்க சங்கிலி 2 அரைப் பவுன் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் புதன்கிழமை (4) பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவரான பெண் தனது வீடான பெரிய கல்லாற்றில் இருந்து மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ தினமான புதன்கிழமை (4) பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டியில்; ஏறி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்தடைந்தார்.

இதையடுத்து புதூருக்கு செல்வதற்கான பஸ் வண்டி 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பஸ் வண்டிக்காக பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்து கொண்டார். இதன்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர் பஸ் வண்டிக்காக காத்திருந்த அந்த முதியவரான பெண்ணுக்கு அருகில் சென்ற பேச்சுக் கொடுத்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்கவும் இங்கு கள்ளர்கள் அதிகம் உங்கள் சங்கிலியை அறுத்து சென்று விடுவார்கள் என அவர் கொண்டு வந்த ஜூஸ் போத்தலை கொடுத்து அதை குடிக்குமாறு பலதடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குடித்துள்ளார்.

இந்த ஜூஸை குடித்த அவர் மயக்கமானதையடுத்து அவரின் கை பையில் இருந்த 7 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் பஸ் வண்டிக்காகச் சென்ற ஒரு பெண் குறித்த முதிய பெண் அங்கு கிடந்துள்ள நிலையில் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts

Image Ca287Cde46

தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read more
Image 7D493D94C6

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

சுமார் 1 கோடி 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர், வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு,கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61,42 மற்றும் 18 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சஜா நகரிலிருந்து ஏர் அரேபியா விமானம் G.9587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
மூவரும் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளிலிருந்து பிளாட்டினம், மான்செஸ்டர் மற்றும் பென்சன் & ஹெட்ஜஸ் சிகரெட்டுகள் 85,800 அடங்கிய 429 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக புதன்கிழமை (11) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Read more
Image 4120Fc30A5

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழ..

Read more
Image 03Dc3C4E68

பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்

சாமி மலை பகுதியில் உள்ள கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாமி மலை பகுதியில் உள்ள ஹொரணை தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் கவரவலை தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த எட்டு தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலுக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தை வியாழக்கிழமை ( 05 ) ஆம் திகதி காலை 7 .30 மணிக்கு தொடங்கினர்.
கவரவலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் தங்கள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டதற்கு எதிராகவும், நிலுவைத் தொகையுடன் தோட்ட நிர்வாகம் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எட்டு தோட்டத் தொழிலாளர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு 48 நாட்கள் கடந்து விட்டதாக சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கவரவலை தேயிலைத் தோட்டத்தில் தினமும் வேலை செய்ய வரும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை தேயிலை கொழுந்தினை பறிக்க அனுமதிக்க வேண்டாம் என கவரவலை தேயிலைத் தோட்டத்..

Read more

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

Thursday, February 5, 2026 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! SHAHNI RAMEES   February 05, 2026 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே…

Read more

மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதால், மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் ; அத்தாவுல்லாஹ்

(ஏ.எல்.நிப்றாஸ்) நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்….

Read more