முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, ரூ.20 கோடி செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர..
Read more