தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி

Img 20260205 Wa0011

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.

திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 142 மூலம் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் குழு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வரத் தவறியதால், விமானம் பல காலி இருக்கைகளுடன் கட்டுநாயக்காவுக்குப் புறப்பட்டது.
மும்பை விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் சாரணர் குழு திட்டமிட்டபடி விமான நிலையத்தை அடைவது தடைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, இன்று பிற்பகல் வரை இலங்கைக்குத் திரும்புவது குறித்து அந்தக் குழு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது.
நிலைமையைத் தொடர்ந்து, அரசாங்கம் தலையிட்டு, சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது..

Read more
கிளிநொச்சியில்-குளவி-கொட்டுக்கு-இலக்கி-39-மாணவர்கள்-மருத்துவமனையில்-அனுமதி

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கி 39 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மதுரி Thursday, February 05, 2026 கிளிநொச்சி, முதன்மைச் செய்திகள் கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை…

Read more

அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (பெப். 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு அலகிற்கான மின் உற்பத்திச் செலவு 37…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கையளித்தார் பைஸர் முஸ்தபா

நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இலங்கையின் தனிநபர் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை இன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என குறித்த மசோதாவில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய முன்மொழிவுகள்:
1. திருமண முறிவு: ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை (Irretrievable breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல்.
2. முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தம்: திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண்கள் காதிகளாகப் பணியாற்றுவதற்கான தடையை நீக்கல் மற்றும் காதிகள் அனைவரும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இதே நிலைமை தொடர்ந்தால் ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல நேரிடும்

அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரச தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையைக் கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். ஆனால் அரசு, மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றது.
இதனால் அரசு தொடர்பில் மக்களுக்கு இருந்து வந்த நல்லெண்ணம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசு அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கின்றது.
ஊழல், மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசுக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக..

Read more

பேராயர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

 முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக ‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர்…

Read more