தமக்கு என்ன வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் வழங்குங்கள்

தீபிகா உடகம

தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பு குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடலை அர்த்தமுள்ளதாக மேற்கொள்ளமுடியும். இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாடளாவிய ரீதியில் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனச் சிந்திக்க வேண்டும். கொழும்பிலுள்ள ஒரு தரப்பு நினைப்பது மாத்திரம் சரியானதாக இருக்காது.

இதன் வெளியீடு மக்களுக்குத் திருப்திகரமானதாக அமைவதற்கு, இச்செயன்முறை குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் சகலரையும் உள்ளடக்கியதாகவும், உரிய முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen’s constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய பேராசிரியர் தீபிகா உடகம, இலங்கை போன்றதொரு நாட்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டியது மிக அவசியம் எனவும், இருப்பினும் தான் ஒரு மாணவியாக இருந்தபோது பேசப்பட்ட இவ்விடயம், தற்போது தான் ஓய்வுபெற்றதன் பின்னரும் பேசப்படுவதாகக் குறிப்பிட்டார்.

‘கடந்த 2022 ஆம் ஆண்டு எழுச்சியடைந்த அரகலய போராட்டத்தை அடுத்து இளம் தலைமுறையினர் நாடளாவிய ரீதியில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கோரினர். அந்த மாற்றம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தெளிவற்றதாக இருந்தாலும், நாட்டின் ஆட்சியியல் நிர்வாகம் தொடர்பில் இளைஞர்கள் அதிருப்தியடைந்திருந்தனர்.

அதன் நீட்சியாகவே இப்போது மீண்டும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்த கருத்தாடல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. இருப்பினும் கடந்த காலங்களில் இதுபற்றிப் பல தடவைகள் பேசப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், அதற்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை’ என்றும் அவர் கரிசனை வெளியிட்டார்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஊழளெவவைரவழைn நேவ எனும் ஆய்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் 250 க்கும் மேற்பட்ட அரசியலமைப்புசார் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட போதிலும், அவற்றில் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஜனநாயக முன்னேற்றமே எட்டப்பட்டதாகவும், ஆகவே இது பொதுவான உலகளாவிய நிலைவரம் என்றே தான் கருதுவதாகவும் தீபிகா உடகம சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அர்த்தமுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டுமாயின், முதலாவதாக இரண்டு குடியரசு யாப்புக்களையும் ஆராயவேண்டும் என்றும், அவ்விரு அரசியலமைப்புக்களும் உருவாக்கப்பட்டபோது பொதுமக்களுடனான கலந்துரையாடல் என்பது மிகக்குறைந்தளவிலேயே காணப்பட்டதாகவும், தற்போதைய செயன்முறையில் அக்குறைபாடு நிவர்த்திசெய்யப்பட்டு, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களுடன் பரந்துபட்ட அளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே அரசியலமைப்பு தொடர்பான பொதுமக்களுடனான கலந்துரையாடலை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுக்கமுடியும். இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை ஊடாக நாடளாவிய ரீதியில் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனச் சிந்திக்க வேண்டும். கொழும்பிலுள்ள ஒரு தரப்பு நினைப்பது மாத்திரம் சரியானதாக இருக்காது.

இச்செயன்முறையின் வெளியீடு மக்களுக்குத் திருப்திகரமானதாக அமையுமா என்ற கேள்விக்கான பதில் நேர்மறையானதாக இருப்பதற்கு, இச்செயன்முறை குறித்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் சகலரையும் உள்ளடக்கியதாகவும், உரிய முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும். அதுமாத்திரமன்றி உணர்வுபூர்வமான அடிப்படைகளில் நோக்கும்போது, இலங்கையின் அரசியலமைப்பு மக்களிடமிருந்து விலகியிருக்கிறது. எனவே மக்கள் மத்தியில் அந்த உணர்வு ரீதியான பிணைப்பையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படைக்கூறுகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ‘எமது அரசியலமைப்பை ஆளும் அடிப்படைக்கூறுகள் எவை என்பது பற்றிக் கவனம் செலுத்தவேண்டும். அதன்படி குறிப்பாக தேசிய மற்றும் உள்ளுராட்சி மட்டங்களில் முறையான அதிகாரப்பகிர்வு உள்வாங்கப்படவேண்டும். அதேபோன்று அடிப்படை உரிமைகளுக்கான வலுவான பாதுகாப்பு, சிவில், சமூக, மத மற்றும் கலாசார உரிமைகளுக்கான பாதுகாப்பு, தனிநபர் மற்றும் குழுக்களின் உரிமைகள், ஒடுக்குமுறைகளை முடிவுறுத்தல் தொடர்பான சரத்து மட்டுப்பாடுகள் அற்றதாக இருத்தல் என்பனவும் அதில் உள்ளடக்கப்படவேண்டும்.

‘அடுத்ததாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை வேறு எந்த முறைமையின் ஊடாகப் பதிலீடு செய்யலாம் என்பது பற்றி ஆராயவேண்டும். அதனை பாராளுமன்ற முறைமையின் ஊடாகப் பதிலீடு செய்யும் பட்சத்தில், நிறைவேற்றதிகாரமுடைய பிரதமரும் ஏதேச்சதிகாரியாக மாறமாட்டாhர் என்பதற்கான உத்தரவாதம் என்ன என்று சிந்திக்கவேண்டும்.

அதுமாத்திரமன்றி முக்கிய கட்டமைப்புக்களை அரசியல்மயமாக்கத்திலிருந்து விடுவித்தல், அரசியலமைப்புப்பேரவையில் சிறுபான்மை உறுப்பினர்களின் பங்கேற்பு, கட்சிகளுக்கு இடையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும். புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு என்பது கடந்த காலங்களைப்போன்று முக்கிய விடயங்களை விடுத்து உருவாக்கப்பட்ட ஆவணமாக இருக்கக்கூடாது’ என வலியுறுத்தினார்.

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்

 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

Read more
25953243 Newproject 2026 02 05T171229326

மோடிமீது தாக்குதல் நடத்த திட்டமா? – பெண் எம்.பி.க்கள் கூறுவது என்ன?

லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க ” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எம்பி ஜோதிமணி மற்றும் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள எம்பி ஜோதிமணி, “கேள்விகளுக்கு பயந்துகொண்டு மோடி அவைக்கு வரவில்லை.
ராணுவ தளபதி கூறியது பொய் என பிரதமர் கூறுவாரா? மோடி, அதானி, பாஜகவை காப்பாற்ற இந்தியாவை மொத்தமாக அமெரிக்காவிற்கு அடகு வைத்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்? அதுபோல எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் விளக்கவேண்டும். இதைத்தான் கேட்கிறோம். இவைகளை கேட்க ராகுல் காந்தி முயலும்போது அவரை பேசவிடாமல் தடுக்கின்றனர். அவர்களின் பயமும், பலவீனமும் இன்று பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்துள்ளது. அனைத்தையும் மறைக்க..

Read more

VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய  அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP

🔸இன்றைய (05.02.2026)  பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.   • கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்வதில் அமைச்சர்…

Read more