Related Posts
கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும்…
Read more
தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு
தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது
சுமார் 1 கோடி 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர், வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு,கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61,42 மற்றும் 18 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சஜா நகரிலிருந்து ஏர் அரேபியா விமானம் G.9587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
மூவரும் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளிலிருந்து பிளாட்டினம், மான்செஸ்டர் மற்றும் பென்சன் & ஹெட்ஜஸ் சிகரெட்டுகள் 85,800 அடங்கிய 429 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக புதன்கிழமை (11) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழ..
பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்
சாமி மலை பகுதியில் உள்ள கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாமி மலை பகுதியில் உள்ள ஹொரணை தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் கவரவலை தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த எட்டு தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலுக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தை வியாழக்கிழமை ( 05 ) ஆம் திகதி காலை 7 .30 மணிக்கு தொடங்கினர்.
கவரவலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் தங்கள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டதற்கு எதிராகவும், நிலுவைத் தொகையுடன் தோட்ட நிர்வாகம் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எட்டு தோட்டத் தொழிலாளர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு 48 நாட்கள் கடந்து விட்டதாக சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கவரவலை தேயிலைத் தோட்டத்தில் தினமும் வேலை செய்ய வரும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை தேயிலை கொழுந்தினை பறிக்க அனுமதிக்க வேண்டாம் என கவரவலை தேயிலைத் தோட்டத்..
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
Thursday, February 5, 2026 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! SHAHNI RAMEES February 05, 2026 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே…
Read more