இலங்கையில் சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்துவது அதிகரிப்பு

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.

இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு

 பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்…

Read more

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில்திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல் உட்பட முக்கிய முன்மொழிவுகள் உள்ளடங்கிய  தனிநபர் பிரேரணைகளை புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான    ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இந்த  தனிநபர் பிரேரணைகளை    வியாழக்கிழமை (05) அன்று பாராளுமன்ற  செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம்   அவர் கையளித்தார்.இந்த…

Read more
இந்திய-கடற்படையினர்-இலங்கை-மீனவர்கள்-மீது-தாக்குதல்-நடத்தவில்லையாம்

இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையாம்

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இக்குற்றச்சாட்டுகளில்…

Read more

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பாக இன்று அறிவித்தார் மின்சாரக் கட்டணக் குறைப்பு: முக்கிய விபரங்கள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் படி: • வாக்குறுதி: அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்…

Read more

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது…

Read more

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி பாத்திமா நஷீமா, கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #பொலன்னறுவை

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே…

Read more