யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்! – Global Tamil News


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், காவற்துறை  கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related Posts

📈 அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! – Global Tamil News

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான…

Read more

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! – Global Tamil News

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! by admin February 4, 2026 written by admin February 4, 2026 அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பறந்ததாக கூறப்படும் ஈரான் ட்ரோனை அமெரிக்க…

Read more

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது….

Read more

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more

🏴    78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு –  யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: – Global Tamil News

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள்…

Read more