யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீக்கப்பட மாட்டாது – அரசாங்கம் உறுதி

யாழ்.-பாதுகாப்பு-படைத்-தலைமையகம்-நீக்கப்பட-மாட்டாது-–-அரசாங்கம்-உறுதி


யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.’யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.இது அடிப்படையற்ற ஒரு செய்தியாகும். பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அநாவசிய பதற்றங்களை ஏற்படுத்தவோ அச்சத்தை ஏற்படுத்தவோ முயற்சிக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும்.அதற்கமைய இவ்வாறான போலி செய்திகளை சமூகமயப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும், அவரால் பகிரப்பட்டுள்ள இந்த போலி செய்தி தொடர்பில் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’ என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

கிறீஸ்-கடலோர-காவல்படை-கப்பல்-புலம்பெயர்ந்தோர்-படகுடன்-மோதியதில்-14-பேர்-உயிரிழந்தனர்.

கிறீஸ் கடலோர காவல்படை கப்பல் புலம்பெயர்ந்தோர் படகுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சியோஸ் தீவின் கடற்கரையில் ஹெலனிக் கடலோர காவல்படை கப்பலுடன் ஒரு வேகப் படகு மோதியதில் குறைந்தது 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 14 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோர…

Read more
g

G

Privacy Policy Contact Us Search முகப்பு மின்னிதழ்இலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம் Homeஇலங்கைசிறப்பு செய்திகள் Nishanthan SubramaniyamFebruary 4, 2026 11:47 am 0நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்…

Read more

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு. – Global Tamil News

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்  க.கனகேஸ்வரன்  தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்…

Read more
மன்னாரில்-பணிசில்-பல்லி-எச்சம்!!

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை…

Read more

அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை

Wednesday, February 4, 2026 அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை  இரண்டு கண்டைனர்களில் போதைப்பொருள்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவைகள் அறிவித்திருந்தும் அவற்றை விடுவித்ததும் போதைப்பொருள் கண்டைனர் வெளியே சென்ற…

Read more

பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்… – இராசகுமார் வினோதன் – Global Tamil News

சமூகம் என்பது மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, இணைந்து வாழும் ஓர் அமைப்பு. ஆனால், இந்த அமைப்பு வரலாற்றின் பெரும்பகுதியில் சமத்துவமானதாக இருந்ததில்லை. ஆணாதிக்கம் எனும் வேரூன்றிய கருத்தியல், ஆண்களை அதிகாரத்தின் மையத்திலும், பெண்களைக் கட்டுப்பட வேண்டியவர்களாகவும், இரண்டாம் நிலையினராகவும் நிலைநிறுத்தியது. ‘பெண்ணாக…

Read more