மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!

மன்னாரில்-பணிசில்-பல்லி-எச்சம்!!


மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்  மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர்.அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more

🏴    78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு –  யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: – Global Tamil News

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள்…

Read more

❄️ ஜப்பானில் பனிப்போர்: 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம் – Global Tamil News

ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20 முதல் பெய்து வரும் அதீத பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

Read more

🚨 லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! – Global Tamil News

லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍 மேற்கு லிபியாவில் உள்ள ஜின்தான் (Zintan) நகரில்…

Read more

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்! – Global Tamil News

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக்…

Read more