மட்டக்களப்பில் அனுமதியில்லை!

மட்டக்களப்பில்-அனுமதியில்லை!


மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று (4) முன்னெடுக்கப்பட்ட கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.அதனையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.அதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், எமது மண் எமக்கு வேண்டும், போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.இந்நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றதென காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.ஆர்ப்பாட்டக்கார்கள் காவல்துறையினரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து  காவல்துறையினருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.பின்னர் கலகம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

🚫 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த நர்சரி ஊழியர்: நாளை நாடு கடத்தப்படுகிறார்! – Global Tamil News

லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின்…

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more

🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில்  – Global Tamil News

பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு…

Read more

⛓️ காலி சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் – போதைப்பொருள் மீட்பு! – Global Tamil News

காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் (SIM) அட்டைகள், 58 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட…

Read more

🚫 அனில் அம்பானி  வெளிநாடு செல்லத் தடை : சிறப்பு புலனாய்வு குழு  அமைக்க உத்தரவு! – Global Tamil News

நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக SIT (Special Investigation Team) அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது அவர் விசாரணைக்கு…

Read more