பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டாம்


 பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் டெண்டர் முறைமைக்கு அமையவே செயல்பட்டதாகக் கூறினார். நிலக்கரி இறக்குமதியின் போது டெண்டர் முறைமையையோ அல்லது விவரக்குறிப்பு முறைமைகளையோ மாற்றவில்லை என்றும், நிலக்கரியின் தரம் குறித்து விசேட நிலைமை ஏதேனும் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் டெண்டர்/கொள்முதல் செயன்முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், நிலக்கரி விநியோகம் அல்லது அதன் தரம் தொடர்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு அமைவான முறைமை ஒன்று டெண்டர் செயன்முறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமையவே செயல்பட்டுள்ளதால் தவறான கூற்றுக்களை வெளியிட வேண்டாம் எனத் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மேலும் தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “எந்தவித டெண்டர் நடைமுறையும் இன்றி, முன்னைய ஆட்சியின் உறவுமுறைத் தொடர்புகளைக் கொண்ட நிறுவனம் ஒன்று அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிலக்கரி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. இம்முறை அவர்களும் டெண்டரில் கலந்துகொண்ட போதிலும், அவர்களுக்கு டெண்டரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் அவர்களுக்காகவே பேசுகின்றனர். அவசரத் தேவை ஒன்று ஏற்பட்டால் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அவ்வாறு கொள்வனவு செய்தாலும் அதனால் நட்டம் ஏற்படாது. தற்போது 6 கப்பல் தொகுதிகள் துறைமுகத்திற்கு வந்துள்ளன. முதலாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளில் சில மாற்றங்கள் இருந்தாலும், ஏனையவை தேவையான மட்டத்தில் உள்ளன எனக் கூறினார்.

Related Posts

கிறீஸ்-கடலோர-காவல்படை-கப்பல்-புலம்பெயர்ந்தோர்-படகுடன்-மோதியதில்-14-பேர்-உயிரிழந்தனர்.

கிறீஸ் கடலோர காவல்படை கப்பல் புலம்பெயர்ந்தோர் படகுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சியோஸ் தீவின் கடற்கரையில் ஹெலனிக் கடலோர காவல்படை கப்பலுடன் ஒரு வேகப் படகு மோதியதில் குறைந்தது 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 14 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோர…

Read more
g

G

Privacy Policy Contact Us Search முகப்பு மின்னிதழ்இலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம் Homeஇலங்கைசிறப்பு செய்திகள் Nishanthan SubramaniyamFebruary 4, 2026 11:47 am 0நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்…

Read more

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு. – Global Tamil News

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை  மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்  க.கனகேஸ்வரன்  தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்…

Read more
மன்னாரில்-பணிசில்-பல்லி-எச்சம்!!

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை…

Read more

அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை

Wednesday, February 4, 2026 அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை  இரண்டு கண்டைனர்களில் போதைப்பொருள்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவைகள் அறிவித்திருந்தும் அவற்றை விடுவித்ததும் போதைப்பொருள் கண்டைனர் வெளியே சென்ற…

Read more

பெண்ணாக ஆண் எனும் சமூகத்தில்… – இராசகுமார் வினோதன் – Global Tamil News

சமூகம் என்பது மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, இணைந்து வாழும் ஓர் அமைப்பு. ஆனால், இந்த அமைப்பு வரலாற்றின் பெரும்பகுதியில் சமத்துவமானதாக இருந்ததில்லை. ஆணாதிக்கம் எனும் வேரூன்றிய கருத்தியல், ஆண்களை அதிகாரத்தின் மையத்திலும், பெண்களைக் கட்டுப்பட வேண்டியவர்களாகவும், இரண்டாம் நிலையினராகவும் நிலைநிறுத்தியது. ‘பெண்ணாக…

Read more