78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் செய்தி


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எமது தாய்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.சுதந்திரம் என்பது நீதியை நிலைநாட்டுதல், ஒற்றுமையைப் பேணுதல், பரஸ்பர மரியாதையையும் பொறுப்புணர்வையும் காத்தல் ஆகியவற்றை எம்மிடம் வலியுறுத்தும் ஒரு புனிதமான நம்பிக்கையாகும். பல மதங்களும் பல இனங்களும் இணைந்து வாழும் நாடாகிய இலங்கை, அமைதியான இணைந்த வாழ்வு, உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் தேசிய ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கான கூட்டு அர்ப்பணிப்பின் மூலமே தனது பலத்தைப் பெறுகிறது.தாய்நாட்டை மதித்தல், நீதியான சட்டங்களைப் பின்பற்றுதல், சமூக நீதியை ஊக்குவித்தல், சமூக நலனுக்காக நேர்மறையாக பங்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இஸ்லாம் போதிக்கிறது. இவ்வுணர்வின் அடிப்படையில், அனைத்து சமூகங்களையும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நெறிமுறைமிக்க நடத்தை, பன்மைத் தன்மைக்கு மரியாதை, நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு நாம் அழைக்கின்றோம்.சாதி, இனம், மதம் என்ற பேதமின்றி எமது சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் மேற்கொண்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த தலைவர்களையும் தேசபக்தர்களையும் ஆழ்ந்த நன்றியுடன் இந்நாளில் நினைவுகூருகின்றோம்.எமது முன்னோர்கள், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரத்தை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும், மரியாதை, கௌரவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தை கனவுகண்டு, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது உழைத்தனர்.இந்தச் சூழலில், நவீன உலகளாவிய அபிவிருத்திகளுடன் ஒற்றுமையோடு நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் அதே வேளையில், இந்த நாட்டின் மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கங்களுக்கு உள்ளது.இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம் அனைவரும், எதிர்காலத் தலைமுறைகளுக்காக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் ஒன்றிணைந்து பாடுபடுவோமாக.சர்வ வல்லமை பெற்ற அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எமது தாய்நாட்டிற்கு நீடித்த அமைதி, நிலைத்த தன்மை, ஒற்றுமை மற்றும் செழிப்பை அருள்வானாக!முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்விதலைவர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாஅஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்பொதுச் செயலாளார்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

தேசத்தை கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்பும் அவசியம் – பிரதமர்

 விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் அனைவரினதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே…

Read more

சகல அரசியல் சிவில் அமைப்புகளும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – சஜித்

 சுதந்திர தினத்தில் சகல அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமே சுதந்திரத்தைப் பெற்றோம். இந்தத் தருணத்திலும் நாட்டுக்குத் தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகுமென எதிர்க்கட்சித்…

Read more

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டாம்

 பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் டெண்டர் முறைமைக்கு…

Read more

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.

 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு…

Read more
யாழ்.-பாதுகாப்பு-படைத்-தலைமையகம்-நீக்கப்பட-மாட்டாது-–-அரசாங்கம்-உறுதி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீக்கப்பட மாட்டாது – அரசாங்கம் உறுதி

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…

Read more
ஒட்டுசுட்டானில்-சட்டவிரோத-மின்வேலியில்-சிக்கிய-5-வயது-சிறுவன்-உயிரிழப்பு

ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த மோகனராசா லோயிதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக…

Read more