7

7


நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற தியாகங்களைச் செய்தவர்களை கௌரவிக்கும் வகையிலும் நினைவு மற்றும் நன்றியுணர்வின் சூழலில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 அழைப்பாளர்களுடன் பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸார் அடங்கலாக 4,500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். தேசிய தின கொண்டாட்டங்களின் மீது இழக்கப்பட்டுள்ள கவனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் இலங்கை அரசியல் ரீதியாக நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்வதே இதன் நோக்கம் என பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உட்பட சிறப்பு அதிதிகளின் வருகையையடுத்து பாடசாலை மாணவ, மாணவிகளால் தேசிய கீதம் மற்றும் ஜய மங்கள கீதம் ஆகியன இசைக்கப்படும். அதனையடுத்து ஜனாதிபதியினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். இன்று இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் நேற்று விசேட பிரித் பாராயண நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேபோன்று இன்று காலை சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்புக்கள், மரியாதை பீரங்கி வேட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் என அனைத்து அம்சங்களும் இடம்பெறும். அணிவகுப்பில் 234 முப்படையினதும் அதிகாரிகள் மற்றும் 3323 படை படைவீரர்களுடன். தேசிய கெடற் படையின் 12 அதிகாரிகள் மற்றும் 479 கெடற் படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் 12 இராணுவ அதிகாரிகள் மற்றும் 82 படைவீரர்களின் பங்கேற்புடன் மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. விமானப்படையின் 03 பெல் ஹெலிகொப்டர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்ட வண்ணம் சாகசங்களை மேற்கொள்ளவுள்ளன. இம்முறை சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் வீண் விரயங்களை தவிர்த்து தேசிய உணர்வுடனும் பெருமையுடனும் அதனைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும. இலங்கையிலுள்ள அனைத்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கு இதற்காக விசேட அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் 2000 விசேட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். வீண் செலவுகளை தவிர்க்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து ராஜதந்திரிகளை அழைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. Post Views: 0

Related Posts

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more

🏴    78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு –  யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: – Global Tamil News

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள்…

Read more

❄️ ஜப்பானில் பனிப்போர்: 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம் – Global Tamil News

ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20 முதல் பெய்து வரும் அதீத பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

Read more

🚨 லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! – Global Tamil News

லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍 மேற்கு லிபியாவில் உள்ள ஜின்தான் (Zintan) நகரில்…

Read more

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்! – Global Tamil News

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக்…

Read more