3271நாட்களாக நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம்!

3271நாட்களாக-நீதி-கேட்டு-அமர்ந்திருக்கிறோம்!


இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாளை (பெப்ரவரி 04ஆம் திகதியை) , காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இன்றைய தினம் சுதந்திர தினம் அல்ல. எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரில்,வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. அவ்வகையில் இலங்கை சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Related Posts

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

🚫 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த நர்சரி ஊழியர்: நாளை நாடு கடத்தப்படுகிறார்! – Global Tamil News

லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின்…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more

🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில்  – Global Tamil News

பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு…

Read more

⛓️ காலி சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் – போதைப்பொருள் மீட்பு! – Global Tamil News

காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் (SIM) அட்டைகள், 58 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட…

Read more

🚫 அனில் அம்பானி  வெளிநாடு செல்லத் தடை : சிறப்பு புலனாய்வு குழு  அமைக்க உத்தரவு! – Global Tamil News

நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக SIT (Special Investigation Team) அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது அவர் விசாரணைக்கு…

Read more