லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்


முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி படுகொலை செய்யப்பட்டார். கடாபியின் ஆட்சிக்காலத்தில் அவரது மகன்களில் ஒருவரான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) லிபியாவில் முக்கிய நபராக வலம் வந்தார். கடாபியின் அரசியல் வாரிசாகவே இவர் கருதப்பட்டார்.  லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி பயின்ற சைஃப் அல்-இஸ்லாம், சரளமாக ஆங்கிலம் பேசுவார். சைஃப் அல்-இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் நட்பு முகமாக கருதப்பட்டார். கடாபியின் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பின்னர், பழங்குடி வேடத்தில் சைஃப் அல்-இஸ்லாம், அண்டை நாடான நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அபுபக்கர் சாதிக் படைப்பிரிவு போராளிகளால் கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் ஜின்டானுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. 2017 ஆம் ஆண்டில் பொதுமன்னிப்பு பெற்று விடுதலை செய்யப்பட்டார். தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், 2021 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால், அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.  சுட்டுக்கொலைஇந்நிலையில் இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் ஜின்டன் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத 3 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கிதாரிகள் சிசிடிவி கேமராவை முடக்கியதாக தெரிய வந்துள்ளது. சைஃப் கடாபியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த அப்துல்லா உத்மான் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.ஆனால் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுவரை எந்த ஆயுதக்குழுக்களும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. 

Related Posts

தவறான-நோயறிதல்:-நுழையீரல்-அகற்றப்பட்டது!

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.மற்றொரு தவறான…

Read more

“உங்கள் முகத்தில் சிரிப்பை காணவில்லை”கேள்வி கேட்ட செய்தியாளர்: “மோசமானவர்” என சாடிய டிரம்ப்! – Global Tamil News

சமீபத்தில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்கள் குறித்து CNN செய்தியாளர் கெய்ட்லான் காலின்ஸ் (Kaitlan Collins) கேள்வி எழுப்பினார். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காதது குறித்து அவர் கேட்டபோது,…

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

🚫 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த நர்சரி ஊழியர்: நாளை நாடு கடத்தப்படுகிறார்! – Global Tamil News

லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின்…

Read more

🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில்  – Global Tamil News

பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு…

Read more

⛓️ காலி சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் – போதைப்பொருள் மீட்பு! – Global Tamil News

காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் (SIM) அட்டைகள், 58 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட…

Read more