‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ – எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு

Download 3

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும் நீதி கிடைப்பதில்லை’ என உச்ச நீதிமன்றத்திடம் மம்தா பானர்ஜி முறையிட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.எம்.பஞ்சோலி அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், தலைமை நீதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

அந்தக் கடிதத்தில், ‘‘இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் மம்தா பானர்ஜி. நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையுடனும், நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் வழக்கங்களுக்கு இணங்கவும் நடந்து கொள்ள அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, அவர் தனது தரப்பை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், மம்தா பானர்ஜி பேச அனுமதி அளித்தார். அப்போது மம்தா பானர்ஜி, தனக்கு ஐந்து நிமிடம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து தனது தரப்பு வாதத்தை மம்தா பானர்ஜி முன்வைத்தார்.

அப்போது அவர், ‘‘பிரச்சினை என்னவென்றால், எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை. நான் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மொழி பிரச்சினைகளுக்காகவும், எழுத்துப் பிரச்சினைகளுக்காகவும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்படி நடப்பதை மாநில அரசு விரும்பவில்லை.

உதாரணத்துக்கு ஒரு பெண் தனது மாமனார் குடும்பப் பெயரை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டதற்காக அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பின் ஒரு பெண் தனது கணவர் வீட்டுக்கு இடம் மாறியதால் அவரது பெயரை, முரண்பாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், புகழ்பெற்ற வங்க கவிஞர் ஜாய் கோஸ்வாமி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி தீபக் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தீவிர சிறப்புத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆதார் அடையாள அட்டையை ஏற்க மறுப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் மீறுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பிடச் சான்று அனுமதிக்கப்படுகிறது, சாதிச் சான்று அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கம் மட்டும் குறிவைக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது.

நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாமில் தீவிர சிறப்பு திருத்தம் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஏன்? இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதைச் செய்ய என்ன அவசரம்?

சிறப்பு தீவிர திருத்தத்தால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. தயவு செய்து மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார் .

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் நியாயமானவை என்பதால் அதை விசாரணைக்கு ஏற்பதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக சிறிதேனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள் என தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

மலையகத்தின் பெயரிடல் அரசியல்: வரலாற்றுப் பின்னணியில் சமூகத் தாக்கம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தற்போதைய ஜீவன் தொண்டமான் வரை ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மலையகப் பிராந்தியத்தில் நீடித்து வருகிறது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே மலையகத்தில் உள்ள பல அரச நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தொண்டமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களில் அங்கம் வகித்த இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான அரச நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைத்துள் ளது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், குறித்த பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தமை பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், மலையக பிரதிநிதித்துவம் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பான விவாதத்தின் போது இந்த..

Read more
Download 7 1

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தின் மூத்த கல்வியாளர்களுள் ஒருவரான முனைவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். இராஜகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராக‌த் தமது கல்விப் பணியைத் தொடங்கிய‌ அவர் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலியினைத் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மருத்துவ ஆய்வுக்காக உடல்’ – சென்னை க..

Read more
Img 20260204 142551 0

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” : ஹட்டனில் மக்கள் மாநாடு

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும..

Read more
Download 6 2

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகம் விற்கப்படவில்லை: காவல் துறை அறிக்கை

சென்னையில் நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சென்னை நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது..

Read more