உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பிரித்தானிய பிரதமர் கண்டனம்

ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் போர் நிறுத்தம் குறித்து பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போர் நிறுத்த அழைப்புகளை மறுத்துள்ளார்.

மேலும், உக்ரைனில் புதன்கிழமை அதிகாலை 100 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் – இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள்
மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன்னெடுத்திருந்தனர் .

Read more

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.
மற்றொரு தவறான புற்றுநோய் நோயறிதல் ஆஸ்திரிய சுகாதார அமைப்பை உலுக்கியுள்ளது.
அந்தப் பெண் செப்டம்பர் 2024 இல் காய்ச்சல், சளி மற்றும் கடுமையான உடல் பலவீனத்துடன் கிராஸ் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மார்பின் CT ஸ்கேன் எடுக்க உத்தரவிட்டனர். இது அழற்சி மாற்றங்களைக் காட்டியது. ஆனால் கட்டி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.
இருப்பினும், ஒரு திசு மாதிரி எடுக்கப்பட்டது. ஹிஸ்டாலஜிக்கல்-நோயியல் கண்டுபிடிப்புகள் அடினோகார்சினோமா, அதாவது நுரையீரல் புற்றுநோய். வழங்கப்பட்ட தகவல்களின்படி, மருத்துவர்கள் விரைவான நடவடிக்கையை அறிவுறுத்தினர் மற்றும் உடனடி அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
அறுவை சிகிச்சை இறுதியாக ஒரு தனியார் மருத்துவ..

Read more

3271நாட்களாக நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாளை (பெப்ரவரி 04ஆம் திகதியை) , காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இன்றைய தினம் சுதந்திர தினம் அல்ல. எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில்,வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை.
ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. அவ்வகையில் இலங்கை சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more

மலையகத்தின் பெயரிடல் அரசியல்: வரலாற்றுப் பின்னணியில் சமூகத் தாக்கம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தற்போதைய ஜீவன் தொண்டமான் வரை ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மலையகப் பிராந்தியத்தில் நீடித்து வருகிறது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே மலையகத்தில் உள்ள பல அரச நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தொண்டமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களில் அங்கம் வகித்த இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான அரச நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைத்துள் ளது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், குறித்த பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தமை பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், மலையக பிரதிநிதித்துவம் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பான விவாதத்தின் போது இந்த..

Read more