ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! by admin February 4, 2026 written by admin February 4, 2026 அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பறந்ததாக கூறப்படும் ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களின் தகவலின்படி, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை உருவானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அமெரிக்கா–ஈரான் இடையிலான இராணுவ மற்றும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர். அரேபியக் கடல் பகுதியில் நடைபெறும் இந்த மாதிரியான சம்பவங்கள் சர்வதேச கடற்பாதுகாப்பு மற்றும் எண்ணெய் போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Related News