ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரல்


 நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) முறைமை நாளை (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும். மேலதிக விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

வடமாகாண சபையின் சுதந்திர தினம் – Global Tamil News

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு…

Read more

📈 அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! – Global Tamil News

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான…

Read more

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! – Global Tamil News

ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! by admin February 4, 2026 written by admin February 4, 2026 அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பறந்ததாக கூறப்படும் ஈரான் ட்ரோனை அமெரிக்க…

Read more

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது….

Read more

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more