சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம்


இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.பு.கஜிந்தன்

Related Posts

3271நாட்களாக-நீதி-கேட்டு-அமர்ந்திருக்கிறோம்!

3271நாட்களாக நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாளை (பெப்ரவரி 04ஆம் திகதியை) , காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள்…

Read more
மட்டக்களப்பில்-அனுமதியில்லை!

மட்டக்களப்பில் அனுமதியில்லை!

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று (4) முன்னெடுக்கப்பட்ட கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.அதனையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் அங்கு வீதியில்…

Read more
தமிழர்-தேசமெங்கும்-கரிநாள்!

தமிழர் தேசமெங்கும் கரிநாள்!

இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி  இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு…

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரல்

 நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு…

Read more

வடமாகாண சபையின் சுதந்திர தினம் – Global Tamil News

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு…

Read more

📈 அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! – Global Tamil News

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான…

Read more