சகல அரசியல் சிவில் அமைப்புகளும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – சஜித்


 சுதந்திர தினத்தில் சகல அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமே சுதந்திரத்தைப் பெற்றோம். இந்தத் தருணத்திலும் நாட்டுக்குத் தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும்,1948 பெப்ரவரி 04 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரத்துக்கு 78 ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில் அந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதோடு எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியமான விடயமாகும். கடந்த 78 ஆண்டுகளில் பக்கச்சார்பின்றி நாட்டைப் பற்றி ஆராய்ந்தால், நாம் பெற்ற பல வெற்றிகளையும் அதேபோல் பல பின்னடைவுகளையும் அடையாளம் காண முடியும்.அவற்றைப் பற்றி விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிகழ்காலத்தில் செயற்படுவது சிறந்த எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமானது.ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி, சமூக நெறிமுறைகள், கலாசார பாரம்பரியங்கள் போன்ற துறைகளில் முன்னேற்றத்துக்காக இந்த 78 ஆண்டுகளில் பல பாராட்டத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இரகசியமல்ல.வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுடன் தொடர்புடைய இரண்டு உள்நாட்டுப் போர்கள், நாம் பெற்ற சுதந்திரத்தில் நாம் அடைய வேண்டிய வெற்றிகளை ஓரளவு பலவீனப்படுத்தியது என்பது மறைக்க வேண்டிய இரகசியமல்ல. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் சவாலுக்கு உள்ளானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.பகுத்தறிவற்ற அரசியல் முடிவுகள், அதிகாரத்துக்காக மட்டுமே செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் அதிகார மாற்றங்களில் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட சவாலான நிலைமையை இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஆழமாக ஆராய வேண்டும்.தனிநபர் வருமானம், சுகாதாரமான ஆயுள் எதிர்பார்ப்பு, உடல் மற்றும் மன சுகாதார நிலை, சமூக ஒத்துழைப்பு, வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதற்கான சுதந்திரம், கொடைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றை தீர்மானமாகக் கருதும் மகிழ்ச்சி குறியீட்டைப் போலவே, உலகின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் அளவிடப்படும் முக்கிய அளவுகோல்களான சுகாதாரமான வாழ்க்கை, சரியான கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களைப் பற்றி இன்று நாம் காண்பது திருப்திகரமான நிலை அல்ல.நாம் சுதந்திரம் பெறும்போது எதிர்பார்த்த சுதந்திர சமூகம், சுதந்திர பொருளாதாரம், சுதந்திர வாழ்க்கை மட்டுமல்லாமல், சுதந்திரத்துடன் பெறப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் இறையாண்மை போன்ற விடயங்களும் இன்று சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சவால்களாகவே நம் முன் காணப்படுகின்றன.இவை குறுகிய அரசியலில் கட்டமைக்கப்பட வேண்டியவை அல்லது ஒரு தரப்பினரை மட்டும் பாதிக்கும் விடயங்களாகக் கருதி புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல. எனவே, 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாம் அறிவுபூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் நாட்டின் சவால்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது, பெற்ற சுதந்திரம் நாட்டின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் மக்களின் இறையாண்மையை எதிர்கால சந்ததியினருக்காக வலுப்படுத்திப் பேணுவதற்கான பொறுப்பு நமக்கு உள்ளதால் ஆகும்.அதற்காக ஜனநாயக போக்கில் உள்ள சகல சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அதற்காக இந்த சுதந்திர தினத்தில் அனைத்து அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமே சுதந்திரம் பெற்றோம். இந்தத் தருணத்திலும் நாட்டுக்கு தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்…

Read more

🇮🇳 பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி  –  வெளியேறுமாறு உத்திரவு! – Global Tamil News

ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன…

Read more

🏴    78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு –  யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: – Global Tamil News

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள்…

Read more

❄️ ஜப்பானில் பனிப்போர்: 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம் – Global Tamil News

ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20 முதல் பெய்து வரும் அதீத பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

Read more

🚨 லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! – Global Tamil News

லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍 மேற்கு லிபியாவில் உள்ள ஜின்தான் (Zintan) நகரில்…

Read more

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்! – Global Tamil News

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக்…

Read more