திறந்த கடல்பரப்பின் ஒரு பகுதியை முழுமையான 1 GW சூரிய மின் நிலையமாக மாற்றி, உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா. டோங்யிங் (Dongying) கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த open-sea floating solar project, உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் திட்டமாகக் கருதப்படுகிறது. சுமார் 3,000க்கும் மேற்பட்ட மிதக்கும் தளங்களில் (floating platforms) நிறுவப்பட்டுள்ள இந்த மாபெரும் சூரியப் பண்ணை, 27 இலட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது. நிலப்பரப்பின் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக மாறிவரும் சூழலில், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கடற்கரைப் பகுதிகள் ஆகியவற்றை மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தும் சீனாவின் இந்த “Floatovoltaic” அணுகுமுறை, எதிர்கால ஆற்றல் திட்டங்களுக்கு ஒரு புதிய திசையை காட்டுகிறது. மேலும், நீர்மீது அமைக்கப்படும் சூரியப் பலகைகள் இயற்கையாகவே குளிர்ச்சியான சூழலில் செயல்படுவதால், மின்உற்பத்தித் திறன் 10–15% வரை அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வெறும் ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல. நிலத்தைப் பாதுகாப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தன்னிறைவு அடைவது என அனைத்தையும் ஒருசேர இணைக்கும் “Blue Energy Revolution” இதுவே. எதிர்காலத்தில் உலகம் எரிசக்தியை எங்கிருந்து பெறப் போகிறது என்பதற்கான ஒரு தெளிவான சுட்டுரை. ________________________________________