மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி – Global Tamil News


யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மாவட்ட செயலருடன் விரிவாக கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும் பங்குபற்றினார்கள். மேலும், அரசாங்க அதிபருடனான சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள். Tag Words: #Jaffna #DistrictSecretariat #MajorGeneralKPTdeSilva #MaruthalingamPratheepan #Resettlement #LandRelease #DithwaDisaster #SriLankaSecurity #LKA #JaffnaNews2026

Related Posts

⚖️ கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி  – Global Tamil News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரோ…

Read more

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு அறவீடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21…

Read more

பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி! – Global Tamil News

பிரித்தானியா , வரி உயர்வு, Road Tax , பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்…

Read more

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! – Global Tamil News

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! by admin February 3, 2026 written by admin February 3, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது…

Read more

விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி…

Read more

யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம் – Global Tamil News

“ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் “எனும் தொனிப்பொருளில்  சர்வதேச உலக ஈர நில தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது. அந்த வகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், நல்லூர் பிரதேச…

Read more