அணி மோதல் உச்சத்தில்!

அணி-மோதல்-உச்சத்தில்!


இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது.கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள் முரண்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது.முன்னதாக அரசியலமைப்பு சபையிலிருந்து  சிவஞானம் சிறீதரன் விலக மறுத்திருந்த நிலையில் அத்தகைய முடிவையெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சபையிலிருந்து இராணுவ அதிகாரிகளை பதவிக்கமர்த்தும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்திருந்தமை, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அத்தகைய அறிவிப்புக்கள் தொடர்பில் சிவஞானம் சிறீதரன் இதுவரை கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை.

Related Posts

📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! – Global Tamil News

கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை…

Read more

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார் – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர்  படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.  ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவரே காணாமல் போயுள்ளார். குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக படகில் காரைநகர் கடற்பகுதியை நோக்கி சென்று…

Read more

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து:  

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம்…

Read more
அடுத்த-சபாநாயகரிற்கும்-ஆப்பு!

அடுத்த சபாநாயகரிற்கும் ஆப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் 03 அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தினார் .பொலன்னறுவை…

Read more
சிறைவாசம்-:நீடிக்கிறது?

சிறைவாசம் :நீடிக்கிறது?

கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளது சிறைவாசம் தொடர்கின்றது.பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி…

Read more

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ? – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில்…

Read more