விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு – Global Tamil News


யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அந்தவகையில் அச்சுவேலி மற்றும் பலாலிப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை ஒட்டியுள்ள சில விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைப் பண்ணைகள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரிய நெல் மற்றும் மரக்கறிச் செய்கை பண்ணைகள் மற்றும் ஏ9 வீதி மற்றும் பிரதான வீதிகளில் இராணுவத்தினால் நடத்தப்படும் ‘ஹெல விரு’ (Hela Viru) போன்ற உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் நிர்வாகத்தை சிவில் அமைப்புகளிடம் ஒப்படைக்க ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கு மீளக் குடியேறும் விவசாயிகளுக்கு அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஊடாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலங்களைச் சீரமைக்கத் தேவையான டிராக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் விதைகளை வழங்க வடமாகாண விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் சேதமடைந்திருந்தால், புதிய வீடுகளை அமைப்பதற்கு தலா 2.5 மில்லியன் ரூபாய் வரையிலான அரசாங்க வீடமைப்பு மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளதுடன் குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன்களை வழங்கி, மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வங்கிகள் ஊடாக வசதிகள் செய்யப்படும்.

Related Posts

🏆 தமிழக அரசின் விருதுகள்  – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள்  – Global Tamil News

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியாகாத ஒரு படத்திற்கு விருது வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின்…

Read more

⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக    குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும்  குரல் கொடுக்க வேண்டும். – Global Tamil News

மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி மீனவர்களின்…

Read more

டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்: சவூதி அரேபியாவில் குவியும் BRICS முதலீடுகள்! – Global Tamil News

உலகப் பொருளாதாரத்தின் திசைவேகம் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் சவூதி அரேபியாவின் நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆர்வம் காட்டி வருகின்றன. சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ்…

Read more

கடல்மீது சூரிய மின் நிலையம் – சீனாவின் ‘ப்ளூ எனர்ஜி’ புரட்சி! – Global Tamil News

திறந்த கடல்பரப்பின் ஒரு பகுதியை முழுமையான 1 GW சூரிய மின் நிலையமாக மாற்றி, உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா. டோங்யிங் (Dongying) கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த open-sea floating solar project, உலகிலேயே மிகப்பெரிய…

Read more

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை

 புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது…

Read more

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு

 பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 இல் 37 ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம்…

Read more