உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை குறித்த அறிவிப்பு


 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இன்று (02) முதல் அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Related Posts

⚖️ கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி  – Global Tamil News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரோ…

Read more

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு அறவீடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21…

Read more

பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி! – Global Tamil News

பிரித்தானியா , வரி உயர்வு, Road Tax , பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்…

Read more

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம்,…

Read more

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! – Global Tamil News

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! by admin February 3, 2026 written by admin February 3, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது…

Read more

விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி…

Read more