இலங்கை மின்சார சபை கலைப்பது குறித்த உத்தியோபூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும்


இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.அடிப்படை ஒதுக்கீட்டுத் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம் மற்றும் நீண்ட கால மின் விநியோக மேம்பாட்டுத் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இதன் இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, பெப்ரவரி மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், விருப்ப ஓய்வு (VRS) பெற விண்ணப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் இதற்கமைய மேற்கொள்ளப்படவுள்ளன.மின்சார சபையின் 2,173 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்ததுடன், அவர்களில் 20 பேர் தமது விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

⚖️ கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி  – Global Tamil News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரோ…

Read more

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு அறவீடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21…

Read more

பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி! – Global Tamil News

பிரித்தானியா , வரி உயர்வு, Road Tax , பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்…

Read more

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம்,…

Read more

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! – Global Tamil News

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! by admin February 3, 2026 written by admin February 3, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது…

Read more

விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி…

Read more