🚩 கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பாரிய  பேரணி! – Global Tamil News


வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா (Kiwul Oya) திட்டத்திற்கு எதிராக இன்று (பெப்ரவரி 02, 2026) எழுச்சியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக ஆரம்பமான போராட்டப் பேரணியானது நெடுங்கேணியிலிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இப்பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறீஸ்கந்தரசா, மு.சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரான க.துளசி, சிறீரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டார்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனா். மகாவலி ‘எல்’ (Mahaweli L Zone) வலயத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இத்திட்டம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் ஒரு “திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கை” எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலில் திரண்ட மக்கள், “கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம்”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். கிவுல் ஓயாத் திட்டத்தின் மூலம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையோர கிராமங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்ற அரசு முயற்சிப்பதாகவும், இதன் மூலம் வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்கள் பௌத்த மயமாக்கப்படுவதாகவும் தமிழ் தரப்பு நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகிறது. Tag Words: #VavuniyaProtest #KiwulOya #MahaweliLZone #LandRights #LKA #TamilRights #Nedunkeni #NorthernSriLanka #BreakingNews2026 #StopColonization

Related Posts

பேலியகொடை மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது

 பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முறைமை, இன்று (02) முற்பகல் போக்குவரத்து,…

Read more
குடும்பமாக-உள்ளே!

குடும்பமாக உள்ளே!

மகிந்தவின் மூத்த சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறீPலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த உத்தரவு…

Read more

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி…

Read more
சுதந்திர-தினம்-கரி-நாளாக-அனுஸ்டிப்பு!

சுதந்திர தினம் கரி நாளாக அனுஸ்டிப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து கரி நாள் போராட்டத்தினை அறிவித்துள்ளது.அதேவேளையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்களை போராட்டம் முன்னெடுக்கப்பட…

Read more

🐢 நச்சிக்குடாவில்  ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது! – Global Tamil News

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விசேட…

Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு

 சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச்…

Read more