“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”   – Global Tamil News


தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என  விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே    உதய கம்மன்பில  இவ்வாறு  தொிவித்துள்ளாா்.  மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தற்போதைய அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனாலேயே தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்து வருகின்றனர்.    ஆட்சிக்கு வரும்போது இருந்த செல்வாக்குடன் ஒப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வாக்கு வங்கி தற்போது 20 சதவீதம் வரை பாரியளவில் சரிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.  புதிய கல்வி மறுசீரமைப்பை 2027 வரை பிற்போடுவதாக ஜனாதிபதி கூறுகிறார், ஆனால் அதனை அமுல்படுத்துவதாகப் பிரதமர் கூறுகிறார். அரசாங்கத்திற்குள் நிலவும் இந்த முரண்பாடான அறிவிப்புகள் நிர்வாகக் குழப்பத்தைக் காட்டுகின்றன.  மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) காரியாலயத் தீர்மானங்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதால், ஜனாதிபதியின் அறிவிப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அறிவுறுத்தியுள்ளதாக  கம்மன்பில தெரிவித்தார்.  இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாகும். Tag Words: #UdayaGammanpila #SriLankaPolitics #NPP #ProvincialCouncilElections #ColomboNews #LKA #ElectionUpdate2026 #PoliticalCrisis #TamilNews

Related Posts

“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”   – Global Tamil News

தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என  விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

Read more

சீனாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு ஆயுள் தண்டனை! – Global Tamil News

சீனாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு ஆயுள் தண்டனை! by admin February 2, 2026 written by admin February 2, 2026 சீனாவின் முன்னாள் நீதியமைச்சர் டாங் யிஜுன் (Tang Yijun), ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுள்…

Read more

அமெரிக்க – இஸ்ரேல் கடற்படை இணைந்த பயிற்சி! – Global Tamil News

அமெரிக்க – இஸ்ரேல் கடற்படை இணைந்த பயிற்சி! by admin February 2, 2026 written by admin February 2, 2026 நேற்றைய தினம், அமெரிக்க கடற்படையின் ஒரு U.S. Navy destroyer மற்றும் இஸ்ரேல் கடற்படைக் கப்பல்கள் இணைந்து…

Read more

🎬 ஈரானில்  பிரபல திரைக்கதை ஆசிரியர் கைது ! – Global Tamil News

ஈரானில் ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிரபல திரைக்கதை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானியத் திரைப்படமான “It Was Just An Accident” (இது ஒரு விபத்து மட்டுமே) திரைப்படத்தின் இணைத் திரைக்கதை ஆசிரியரான மெஹ்தி…

Read more

🤝 அமெரிக்கா – இந்தியா  இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: – Global Tamil News

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே இன்று (பெப்ரவரி 2, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர்…

Read more

சஜின் வாஸ் குணவர்தனவிடம் 4 மணிநேர விசாரணை! – Global Tamil News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (பெப்ரவரி 02, 2026) காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  சர்ச்சைக்குரிய கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) தொலைக்காட்சியின் உருவாக்கம், அதன் செயல்பாடு மற்றும் ஒளிபரப்பு உரிமம்…

Read more