by admin February 2, 2026 written by admin February 2, 2026 ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலில், ஈரானின் அதியுச்ச தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் ஒரு பிராந்தியப் போரை (Regional War) தூண்டும் என ஈரானின் அதியுச்ச தலைவர் எச்சரித்திருந்தார். “அவர் அப்படித்தான் சொல்வார். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த கப்பற்படை எங்களிடம் உள்ளது” என ட்ரம்ப் பதிலளித்துள்ளார். ஈரானுடன் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. “நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அவர் சொன்னது (போர் எச்சரிக்கை) சரியா இல்லையா என்பதை நாம் கண்டறிவோம்.” என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரசியல் அரங்கில் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியாக இப்பிரச்சினை தீர்க்கப்படுமா அல்லது இராணுவ ரீதியான நடவடிக்கைகள் தொடருமா என்பதே தற்போதைய உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. ________________________________________ Related News