வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News


மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடமாகாண ஆளுநரால் நேற்றைய தினம் சனிக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்: மாவை.சேனாதிராசாவை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் திகழ்ந்தார். நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில்  மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Related Posts

இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! – Global Tamil News

தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை…

Read more

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனா எடுத்த புதிய முயற்சி! – Global Tamil News

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நேரங்களில், அதிகாரபூர்வமாக கூடுதல் நெடுஞ்சாலை வழித்தடங்களை (extra highway lanes) திறந்து வாகனங்களைச் செலுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள், நீண்ட வார இறுதிகள் போன்ற நேரங்களில் உருவாகும் மிகுந்த வாகன…

Read more

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more