புராதன புத்தர் சிலையை கடத்திய 14 பேர் மாவத்தகமவில் கைது!


புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி இரவு, மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையில் தேரர்கள் தங்கியிருக்கும் ஆவாசப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணைகளின்படி, அன்றைய தினம் இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நால்வர் விகாரைக்கு வந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை அடி உயரமான தங்க நிறத்திலான புத்தர் சிலையை, ஒரு விசாரணைக்காகத் தேவைப்படுவதாகக் கூறி தேரர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் நேற்று (31) மாவத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வேன் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் நீர்கொழும்பு, தெல்தெனிய, மொனராகலை, மத்துகம, மாத்தளை மற்றும் ரிதீகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் நேற்று பிலஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

பாலின மாற்ற சிகிச்சை  : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! – Global Tamil News

அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, நீதிமன்ற ஜூரி குழுவினர் 2 மில்லியன் டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர். பாலின…

Read more

🇨🇳 சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில்  -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம்  – Global Tamil News

சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் அமெரிக்காவின் தலையீடுகளைத் தொடர்ந்து,…

Read more
தையிட்டி-விகாரைக்கு-எதிராக-கொட்டும்-மழைக்குள்ளும்-போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய…

Read more

ரணில் மீதான விசாரணை சட்டப்படிதான் நடக்கிறது…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது…

Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படாது! ஆனால்…

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15,000 பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறை திணைக்களங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். திணைக்களத்தின் மொத்தமுள்ள…

Read more
தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more