
நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை. விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண சூட்டிங் என சூட்டிங்குகளுக்கு அனுமதியில்லை. ஆலயத்திற்கு முன்பாக நின்று படங்கள் எடுத்து கொள்ள முடியும். அதனை ஒரு சூட்டிங்கா நடத்த முடியாது. இன்றைக்கு தைப்பூசம் , முருகன் வெளிவீதியுலா வருவதற்கு தயார். உள்ளே வசந்தமண்டப பூஜை முடிந்து , முருகனை தூக்க ரெடி. அந்த நேரம் கப்புடன் , ஆலய வேலிக்குள் சென்று கப்பை வைத்து சூட்டிங் செய்ய தயார். உள்ளே படம் எடுக்க தொடங்க சிவப்பு சால்வைக்காரர்கள் பாய்ந்து வருவார்கள் என நல்லூரை பற்றி தெரிந்த கமரா டீம் முழுக்க வேலிக்கு வெளியே , எதிர்பார்த்தது போல நடந்தது. பிறகு கப்பை தூக்கி கொண்டு வேலிக்கு வெளியே வந்து வைத்து ஆறுதலாக படம் எடுத்தாங்க , யாழ்ப்பாணத்திற்கு கப்பை எடுத்து வந்த ஏற்பாட்டு குழு ஆலய நடைமுறைகள் குறித்து தெளிவு படுத்தி , அந்த குழப்பத்தை தவிர்த்து இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.