ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தனக்கு வருகை தர முடியாது எனவும், அதற்காக 02 வார கால அவகாசம் வழங்குமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாகப் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அதற்காக வேறொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

Read more

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! – Global Tamil News

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த…

Read more

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது!

 எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…

Read more